Pages

Thursday, February 21, 2013

டெல்லி நாடாளுமன்றத்தில் பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக (புலிகளின் விசுவாச நாடக கொம்பனி) திமுக, அதிமுக எம்.பிக்கள் கோஷம்!

Thursday, February 21, 2013
புதுடெல்லி::நாடாளுமன்றத்தில்  புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  (புலிகளின் விசுவாச நாடக கொம்பனி) திமுக, அதிமுக எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியதும் இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பத் துவக்கினர்.

பிரபாகரனின் இளைய மகன பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால்  படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அரசுக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

திமுக, அதிமுக எம்.பிக்களை அமைச்சர்கள் ராஜிவ் சுக்லா மற்றும் நாராயணசாமி ஆகியோர் அமைதிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதேபோல் அலிகார் பல்கலைக் காகத்துக்கு சிறுபானை பல்கலைக் கழக அந்தஸ்து கோரி பகுஜன் சமாஜின் சபியுர் ரஹ்மான் முழக்கங்களை எழுப்பினார். அதே நேரத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து தமது உரையை வாசித்தார்.

No comments:

Post a Comment