Thursday, February 21, 2013
சென்னை::ராஜீவ் கொலையாளிகளை காப்பத்தும் முயற்சியில் (புலி விசுவாசி) கருணாநிதி: தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன்வைத் பெரும்பான்மை நாடுகளுடன் இணைய யோசனை!
தி.மு.க., தலைவர் (புலி விசுவாசி) கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தூக்குத் தண்டனை பற்றிய கருத்துகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. வீரப்பனின் நண்பர் என, குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தத் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டிருந்தால், அவர்கள் கடந்த, 9 ஆண்டுகளாக, சிறையிலே உழன்று உருக்குலைய வேண்டி இருந்திருக்காது. அவர்கள், 9 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் அனுபவித்து விட்டு, தற்போது மேலும் தூக்குத் தண்டனை என்றால், ஒரே குற்றத்திற்காக இரண்டு கடும் தண்டனைகள் என, ஆகிவிடாதா என்பதையும், நமது சட்டம் அனுமதிக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த, 2007ல் ஐ.நா., சபை தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன் வைத்தபோது, அதை, 104 நாடுகள் ஆதரித்துக் கையெழுத்திட்டன. இந்தியா உட்பட, 39 நாடுகள் தான் எதிர்த்து வாக்களித்தன. ஐ.நா., தீர்மானத்தை ஒட்டி, உலகின், 90 சதவீத நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன. அந்தப் பெரும்பான்மை நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைய வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment