Pages

Friday, February 15, 2013

அமேரிக்க இலங்கை உறவை எவராலும் தடுக்க முடியாது - வின்ஸ்டன்!

Friday, February 15, 2013
இலங்கை::யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் தொடர்பாக இலங்கை அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் பெரிதும் பாராட்டத்தக்கதுடன் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள துரித அவிவிருத்தித் திட்டங்களும் வரவேற்கத்தக்கதாகவுள்ளது என இலங்கைக்கான அமேரிக்கத் தூதரகத்தின் துனைப் பிரதானி வில்லியம் வின்ஸ்டன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் “அமேரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால நட்புறவு நிலவிவருகின்றது. எவராலும் இதனை தடுக்கமுடியாது அத்துடன் இலங்கைக்கு நாம் எப்போதும் உதவத் தயாராக உள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இலங்கை அரசுக்கும் அதன் மக்களுக்கும் எந்நேரமும் உதவி வழங்க நாம் தயாராக உள்ளோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி முலங்காவில் வைத்தியசாலை மற்றும் முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் வைத்தியசாலை ஆகியவற்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாரு குறிப்பிட்டார்.

இவ் இரு வைத்தியசாலைகளும் அமேரிக்க அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment