Pages

Monday, February 18, 2013

இலங்கைக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்வதற்கு: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டுக்கு வலுவான ஓர் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் - ஏசியன் ட்ரிபியூன்!

Monday, February 18, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டுக்கு வலுவான ஓர் குழுவை அனுப்பி வைக்க வேண்டுமென ஏசியன் ட்ரிபியூன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்வதற்கு வலுவான ஒர் பிரதிநிதிகள் குழுவினை அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் மாநாட்டில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உத்தேசித்துள்ளது.

எல்லா காலங்களிலும் சீனாவையும் ரஸ்யாவையும் நம்பிக் கொண்டிருக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைப் பேரவை மாநாடு தொடர்பில் அரசாங்கம் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது.

குறிப்பாக சிறந்த ஆளுமையுடைய வலுவான ஓர் பிரதிநிதிகள் குழுவினை அனுப்பி வைப்பதன் மூலம், எதிர்மறையான பிரச்சாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு வெற்றிகரமாக பதிலளிக்க முடியும் என குறித்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment