Pages

Thursday, February 21, 2013

இலங்கை வீரர்கள் பங்கேற்பு- ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ. அதிரடி!!

Thursday, February 21, 2013
சென்னை::இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 20-வது ஆசிய தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளில் 44 நாடுகளின் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ40 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்தது.

 இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நாட்டு வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதனால் தமிழக அரசால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடியாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment