Pages

Sunday, February 24, 2013

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது - அமைச்சர் மஹிந்த யாபா அபேகுணவர்தன!

Sunday, February 24, 2013
இலங்கை::வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. நாட்டு மக்கள் கொரியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் தொழிலாளர்களாக பணியாற்ற விரும்பிய போதிலும், உள்நாட்டில் தொழில் செய்ய விரும்பவில்லை என அமைச்சர் மஹிந்த யாபா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் சூழ்நிலையில் இந்தியத் தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில் பிழையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் அறுவடை காலங்களில் இந்தியத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.தொழிலாளர்களுக்கு நாட்டில் நிலவி வரும் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு இந்தியத் தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மூன்று மாத கால அடிப்படையில் இந்தியத் தொழிலாளர்களுக்கு தொழில் வீசா வழங்கப்பட உள்ளது.தென் இந்திய ஊழியர்கள் மிகவும் குறைந்த ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு கடமையாற்றக் கூடியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், இலங்கையர்களுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான அறிவிப்பை அரசாங்களம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment