Pages

Tuesday, February 19, 2013

அமெரிக்காவினால் இந்த முறை மனித உரிமை பேரவை அமர்வின் போது, இலங்கைக்கு எதிரான யோசனையில், உள்ளடங்கியுள்ள சில விடயங்கள் ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ளன!

Tuesday, February 19, 2013
சென்னை::அமெரிக்காவினால் இந்த முறை மனித உரிமை பேரவை அமர்வின் போது, இலங்கைக்கு எதிரான யோசனையில், உள்ளடங்கியுள்ள சில விடயங்கள் ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ளன.

ஊடகங்களினால், இன்று அது தொடர்பில் செய்திக் குறிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.

பொதுநலவாய நாடுகளுடன் இலங்கை ராஜதந்திர ரீதியிலான பிரயத்தனங்களை எடுத்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இது தவிர, ஐக்கிய நாடுகளின் அமைப்பின் விசேட பிரதிநிதிகளுக்கு இடையூறுகள் இன்றி இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருந்த அமெரிக்காவின் யோசனையின் முக்கிய கருத்தாக சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கையில் தமது பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை, கருத்தை வெளியிடும் சுதந்திரம், முரண்பாடு தொடர்பான இடையூறு மற்றும் கொலைகள் தொடர்பில் ஆராய்வதற்கான பணிகளை மேற்கொள்ளும் விசேட பிரதிநிதிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் விசேட அனுமதி இன்றி இலங்கைக்கு வருவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா தமது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment