Pages

Saturday, February 16, 2013

இலங்கையின் மனித உரிமைகள் விடயங்களை பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் புகுத்த முயற்சிப்பது முறையற்ற செயல்:ஜீ.எல்..பீரிஷ் கண்டனம்!

Saturday, February 16, 2013
இலங்கை::இலங்கையின் மனித உரிமைகள் விடயங்களை பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் புகுத்த முயற்சிப்பது முறையற்ற செயல் என்று இலங்கை தெரிவித்துள்ளது.

பங்களாதேஸ{க்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ், அந்த நாட்டு வெளியுறவுகள் துறை அமைச்சர் கலாநிதி திப்பு மோனியை நேற்று சந்தித்தார்.
இதன் போது, திட்டமிட்டப்படி இந்த வருடம் பொது நலவாய நாடுகளின் மாநாடு இலங்கையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.

பொது நலவாய நாடுகளின் நடப்பு தலைமைப் பொறுப்பை பங்களாதேஸ் கொண்டுள்ளது.

இதற்கிடையில் இலங்கையின் மனித உரிமை குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்த முறை இலங்iயில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தக் கூடாது என்று கனடாவும், மேலும் சில நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையிலேயே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பங்களாதேஸ{க்கான விஜயத்தை மேற்கொண்டு, இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன் போது பங்களாதேஸ் வெளியுறவுகள் துறை அமைச்சரிடம் விளக்கமளித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் நடப்பு அரசியல் சூழ்நிலை சிறப்பாக காணப்படுவதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் அண்மையில் பொது நலவாய நாடுகள் அமைப்பின் பொது செயலாளர் கமலேஸ்சர்மா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment