Pages

Monday, February 25, 2013

அமெரிக்க யோசனைக்கு பிரித்தானியா ஆதரவு!

Monday, February 25, 2013
ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 22 வது பேரவைக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 25.02.2013 இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தமுறை பேரவைக் கூட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் தற்போது ஜெனீவா நகரை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

அந்த குழுவினருக்கு மனிதவுரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமைதாங்குகிறார்.

மனிதவுரிமைகள் பேரவை அமர்விக்காக இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட இரண்டு அறிக்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் கலந்துரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 20 ம் திகதி முன்வைக்கப்படும் யோசனைக்கு இலங்கை அரசாங்கம் மாற்று திருத்த யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது.

அமெரிக்க இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாக ஏற்கனவே உறுதிபட தெரிவித்துள்ளது.

அதற்கு பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.


இருந்தபோதும், கடந்த முறை இடம்பெற்ற மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தின் போது இலங்கைக்கு எதிராக தமது வாக்கை பயன்படுத்திய இந்தியா இதுவரை உத்தியோகபூர்வமான அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment