Pages

Monday, February 18, 2013

அசாம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து போன்ற வட கிழக்கு மாநில பிரிவினைவாத அமைப்புகளின் கொடூர புத்தி!


Monday, February 18, 2013
புதுடில்லி::பெண்கள், சிறுமியருக்கு, ஆயுத பயிற்சி அளித்து, தீவிரவாத பாதையில் திருப்பி விடும் செயலை, வட கிழக்கு மாநில பிரிவினைவாத அமைப்புகள், காலம் காலமாக செய்துவருகின்றன.

இதனால், ஏராளமானபெண்கள், சிறுமியர், எதிர்காலத்தை தொலைத்து, தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அசாம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து போன்ற வட கிழக்கு மாநிலங்களில், ஏராளமான பிரிவினைவாத அமைப்புகள் செயல்படுகின்றன. தனி நாடு கோரிக்கையை முன்வைத்து, அதிக படிப்பறிவு இல்லாத அப்பகுதி மக்களை, "மூளை சலவை' செய்து, தங்கள் பிரிவினைவாத செயல்களை, பல பிரிவினைவாத அமைப்புகள் அரங்கேற்றி வருகின்றன.சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண்களே அதிகம் இருந்த நிலையில், இந்த பிரிவினைவாத அமைப்புகளில், பெண்கள், சிறுமியர், பருவ வயது பெண்கள் என, ஏராளமானோர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு, பாழுங்கிணற்றில் தெரிந்தேதள்ளிவிடப்படுகின்றனர்.

இந்த அநீதியை எதிர்த்து, குரல் கொடுக்க முடியாமல், அம்மாநில மனித உரிமை அமைப்புகள், மவுனம்காக்கின்றன.வறுமையின் பிடியில் சிக்கியுள்ள ஏழை பெண்கள், இளம் பெண்கள், சிறுமியருக்கு, மலை பகுதிகளில் பயிற்சி கொடுக்கின்றனர். அங்கே, துப்பாக்கி சுடுதல், குண்டு தயாரித்தல் போன்ற பயிற்சிகளை முடிக்கும்பெண்கள், நகர்ப்புறங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.ஆங்காங்கே குண்டு வெடிப்பு உட்பட, தீவிரவாத செயல்களை அரங்கேற்ற, ஆண் தீவிரவாதிகளுடன், ஒரே வீட்டில், கணவன், மனைவி போல தங்க வைக்கப்படுகின்றனர். அவ்வாறு தங்கும் போது, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இந்த முறைகேட்டை, ஜி.என்.எல்.ஏ., - என்.டி.எப்.பி., - உல்பா போன்ற பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் நன்கு அறிந்திருந்த போதிலும், இதை தவிர்க்க முடியாது என, தட்டிக் கழிக்கின்றனர்.இணைந்து வாழ மறுக்கும் பெண்கள், சிறுமியர், ஆண் பிரிவினைவாதிகள் கொல்லப்படுவதும், பருவ வயது சிறுமியர், தற்கொலை செய்து கொள்வதும், பிரிவினைவாத இயக்கங்களில் சகஜமாக நடக்கின்றன.

அழகான பெண்கள், பிரிவினைவாத குழுக்களின் தலைவர்களின் ஆசை நாயகிகளாக பணியமர்த்தப்படுகின்றனர். புத்தகங்களை படிக்கும் கைகளில், பெரிய அளவிலான துப்பாக்கிகள் வழங்கப்படுகின்றன.ஏழை பெற்றோரை காப்பாற்ற, மாதந்தோறும் பணம் அனுப்பி விடுகிறோம் என, பிரிவினைவாத குழுக்கள் அளிக்கும் உறுதிமொழியை நம்பி, 2,000 ரூபாய்க்காக, பிரிவினைவாத இயக்கங்களில் சேர்ந்து, வாழ்க்கையை தொலைக்கும், பல, வட கிழக்கு மாநில பெண்கள், கருகிய மொட்டுகள் போல, இளம்வயதிலேயே தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment