Pages

Thursday, February 21, 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானம் இந்தியா இணைய வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

Thursday, February 21, 2013
சென்னை::பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் இலங்கை ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை ராணுவம் போர் விதிமுறை மீறல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என்பதை சேனல்&4 தொலைக்காட்சி மூலம் பலமுறை உலகுக்கு காட்டிவிட்டனர்.தற்போது பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் என்ற 12 வயது பாலகனை சுட்டுக் கொன்றுள்ள காட்சிகளையும் சேனல்-4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியுள்ளது.ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இணைய வேண்டுமென்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம். இலங்கை அதிபர் ராஜபக்சே அடிக்கடி இந்தியா வருவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.இந்திய நாட்டின் உளவுப் பிரிவான “ரா” வின் தலைவர் அலோக் ஜோரி போன்றவர்கள் இலங்கை அதிபரை தனிமையில் சந்தித்து பேசிய விஷயங்கள் ரகசியம் காக்கப்படுவது, இந்தியாவின் மீது தவறான கருத்துக்களை உலக அரங் கில் உருவாக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இந்திய அரசு தடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment