Pages

Friday, February 22, 2013

எந்தவொரு விசாரணைகளையும் எதிர்நோக்கத் தயார் - முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா!

Friday, February 22, 2013
இலங்கை::எந்தவொரு விசாரணைகளையும் எதிர்நோக்கத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிக்கும் நேக்கில் எந்தவொரு இடத்திலும் விசாரணைகளில் பங்கேற்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதும் படையினர் சீரிய ஒழுக்கத்துடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

படையினருக்கு எதிரான களங்கத்தை நீக்குவதற்கு எந்த இடத்திலும் விசாரணைகளில் கலந்து கொள்ளத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 450 புலி போராளிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில்  புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரனின் உடல் இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2010ம் ஆண்டில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்களை வழங்கத் தயார் என சரத் பொன்சேகா தெரிவித்திருந்ததாக பி.பி.சீ ஊடகம் தகவல் வெளியிட்டிருந்ததாக, கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment