Thursday, February 14, 2013

இலங்கை கிரிக்கெட் அணியில் மாற்றங்கள்; தலைவராக அஞ்சலோ மெத்யூஸ்!


Thursday, February 14, 2013
இலங்கை::டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் புதிய தலைவராக சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சற்று முன்னர் விடுத்த அறிக்கையில் இந்தத் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.


டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒரு நாள் அணியின் உப தலைவராக தினேஷ் சந்திமால் பெயரிடப்பட்டுள்ளார்.

சர்வதேச T20 அணித் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நியமணங்கள் ஓராண்டிற்கானவை என்றும் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான அணி விவரம் வெளியிடப்படும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷிற்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான 20 பேர் கொண்ட பயிற்சிக் குழாமும் இன்று அறிவிக்கப்பட்டது.

குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான், அஜந்த மெண்டிஸ், நுவன் குலசேகர, ரங்கன ஹேரத் ஆகிய சிரேஷ்ட வீரர்கள் பயிற்சி குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.

அஷேன் சில்வா, கித்ருவன் விதானகே, துஷ்மந்த சமீர, தரிந்து கௌசால் ஆகிய புதுமுக வீரர்கள் பயிற்சிக் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பயிற்சிக் குழாமிலிருந்து பின்னர் இறுதிக் குழாம் அறிவிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment