Monday, February 25, 2013
இலங்கை::வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா நேற்று இலங்கை- இந்திய மக்களின் பங்கேற்றலுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற திருவிழா நிகழ்வுகளில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 7000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். யாழ். ஆயரின் தலைமையில் இலங்கை இந்திய நாடுகளின் அருட் தந்தையர்கள் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றியதுடன், திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் இணைந்து மேற்கொண்டி ருந்தன. நேற்று முன்தினம் திருவிழா நிகழ்வுகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்ப மாகியுள்ளதுடன், நேற்றுக் காலை 8.00 மணி க்குத் திருவிழா திருப்பலி தமிழில் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா, யாழ்ப்பாணத்திலுள்ள பிரதி இந்தியத் தூதுவர் மகாலிங்கம், வட மாகாணத்திற்கான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். கடற்படை கட்டளைத் தளபதி ஷிரந்த உடவத்த, யாழ் மாவட்ட நீதிபதி அமலவன் உட்பட இலங்கை இந்திய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான
அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகளும் இம்முறை திருவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
கச்சதீவு திருவிழாவையொட்டி தீவு முழுவதும் இலங்கை தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. அதேவேளை பல் வர்ணமின் குமிழ்களால்
அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆலயத்திற்குச் செல்லும் முகப்பில் “இலங்கை உங்களை வரவேற்கிறது” என பொறிக்கப்பட்ட பதாகை தொங்கவிடப்பட்டிருந்ததுடன் ஏனைய பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்ட பேனர்களையும் காணமுடிந்தது.
திருவிழாவிற்கு வருகை தந்த யாழ் மறை மாவட்ட ஆயருக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. கடற்படையினரின் டோரா படகு மூலம் கச்சதீவில் வந்திறங்கிய ஆயரை வடமாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி தலைமையிலான உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் இரு நாடுகளிலும் கத்தோலிக்க மதகுருக்கள் ஆகியோர் வரவேற்றனர்.
கடந்த வருடத்தை விட இம்முறை திருவிழாவில் மக்கள் அதிகளவில் கலந்து கொண்டிருந்ததுடன் இருநாட்டு மக்களும் உணவுகளைப் பரிமாறி அன்னியோன்யமாகப் பழகியதையும் காண முடிந்தது.
சீரான கால நிலை நிலவியதால் மக்கள் எதுவித அசெளகரியமுமின்றி திருவிழாவில் முழுமையாக பங்கேற்க முடிந்தது. இந்திய பக்தர்கள் ஒரு நாளுக்கு முன்பே கச்சதீவுக்கு வந்து சிறு சிறு கொட்டில்களை அமைத்துக் கொண்டு தங்கியிருந்ததையும் காண முடிந்தது.
கடைகள் சில போடப்பட்டு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் சவர்க்காரம் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்பட்ட போதும் இந்திய மக்கள் பொருட்களைக் கொண்டு வருவதற்கோ விற்பனை செய்வதற்கோ இந்திய அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தமது நாட்டிலிருந்து புறப்படும் போது பல தடவைகள் பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கச்சதீவுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர்.
நேற்றுக் காலை 8.00 மணிக்குத் திருவிழா திருப்பலி ஆரம்பமாகி பல்வேறு அம்சங்களின் பின் திருச் சொரூப இறுதி ஆசிர்வாதத்துடன் திருவிழா நிகழ்வுகள் 10.00 மணியளவில் நிறைவுபெற்றன.
இலங்கையை நோக்கிய திசையில் கச்சதீவில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தை யாழ். ஆயர் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். திருவிழா நிறைவில் யாழ் ஆயர் மற்றும் இந்திய ராமநாதபுரம் மாவட்ட ஆயரின் சார்பில் அருட்தந்தை சகாயராஜ் ஆசியுரை வழங்கினார்.
இந்திய உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பிரமுகர்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதேவேளை; இந்தியாவிலிருந்து வருகை தந்த மக்கள் இச்சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதம் எனவும் கச்சதீவுக்கு வந்தமை இலங்கைக்கு வந்ததுபோல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர். இலங்கை தொடர்பில் இந்தியாவில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர்கள், இலங்கையின் உண்மை நிலை பற்றியும் இலங்கையிலிருந்து சென்ற ஊடகவியலாளர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய ஆராதனையில் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா கலந்துகொண்டார். அவர் அங்கிருந்த ஊடகவியலாளர்களுடன் உரையாடுகையில்; இந்தத் தடவை பல்லாயிரக் கணக்கான இந்திய பக்தர்கள் கச்ச தீவுக்கு வந்திருப்பது இலங்கை - இந்திய நாடுகளின் மக்களிடையே இருந்து வரும் பாசப்பிணைப்பை வலுப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என்று கூறினார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்து வரும் நீண்ட வரலாற்றில் நட்புறவும் சகோதரத்துவமும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாகவும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதனால் இவ்விரு நாடுகளும் நன்மையடைய முடியும் என்றும் இரு தரப்பினரும் பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் திரு அசோக் கே காந்தா தெரிவித்தார்.
இலங்கைக் கடற்படையினர் இந்த அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ள வந்த பக்தர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் அடிப்படைத் தேவைகளையும் செய்து கொடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக் கடற்படை இவ்விரு நாட்டு மக்களிடையே பரஸ்பர ஒற்றுமையை வளர்ப்பதற்கு பாராட்டத் தக்க ரி(8யில் சேவையாற்றி இருக்கிறது என்று தெரிவித்த இந்தியத் தூதுவர், கடற்படையினர் இலங்கை இந்திய பக்தர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தினார் என்றும் கூறினார். மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளும் பேசி சுமுக தீர்வு காணப்படுமென அவர் தெரிவித்தார்.
இலங்கையிலும் இந்தியாவில் உள்ள சில தரப்பினர் உண்மைக்கு மாறான கருத்துக்களை வெளியிட்டு இவ்விரு நாட்டு மக்களிடையே நட்புறவையும் சகோதரத்துவத்தையும் குலைக்க எத்தணிக்கின்றார் என்றும் அவர் கூநினார். இலங்கைக் கடற்படையினர் இரு நாடுகளுக்கும் இடையில் சகோதரத்துவ உணர்வை வளர்ப்பதற்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை அளித்துள்ளது என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருப்பலிக்கு யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் டொக்டர் தோமஸ் செளந்தரநாயகம் தலைமை தாங்கினார். அவருக்கு கச்சதீவு பங்குத் தந்தை உறுதுணை புரிந்தார். கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த நிகழ்வுகளில் யாழ்ப்பாண ஆயர் கலந்துகொண்டது இதுவே முதற் தடவையாகும்.
கடலில் எவரும் மூழ்கிவிடாதவாறு தடுப்பதற்கு கடற்படை வீரர்களும் தயார் நிலையில் இருந்தார்கள். இத்துடன், கச்சதீவுக்கு வருகை தந்தவர்களுக்கு விசேட வைத்திய வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இம்மாதம் 5 ஆம் திகதி முதல் கடற்படையின் சுமார் 150 வீரர்கள் கச்சதீவு இறங்குதுறையை புனர்நிர்மாணம் செய்யும் பணியை சிறப்பாகச் செய்து முடித்தார்கள்.
இந்தியாவில் இருந்து வருகைதந்த வைத்தியக் கல்லூரி மாணவ மாணவிகளும் சிறந்த சேவைகளை இந்தியர்களுக்கு வழங்கியமைக்காக கடற்படைக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தார்கள்.








No comments:
Post a Comment