Sunday, February 17, 2013

நவனீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளது!

Sunday, February 17, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளா நவனீதம்பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 37 விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் திருத்தங்களுடன் கூடிய பரிந்துரைகளை செய்துள்ளது.

இந்த உத்தேச அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையை சட்ட ரீதியானதாக கருதப்பட முடியாது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த அறிக்கையின் சாட்சியங்கள் தொடர்பில் எவ்வித திருப்தியும் அடைய முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது,

எனவே இந்த நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலான எந்தவொரு பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம், நவனீதம்பிள்ளைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment