Tuesday, February 19, 2013
இலங்கை::சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மண்டியிட மாட்டார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ என்பது யார் எங்கிருந்து வந்தார் என்பதனை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வரகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு எதிராக செயற்படுவதில் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்தின் அழுங்கங்களுக்கு அடி பணிந்து மண்டியிட மாட்டார் எனவும், வீரியமாக எழுந்து நின்று சவால்களை எதிர்நோக்குவார் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment