Pages

Saturday, February 23, 2013

பிரித்தானியாவில் செனல் 4 தொலைக்காட்சி இலங்கை இராணுவத்தின் ஆரம்ப விசாரணை நீதிமன்றத்தை விமர்சித்தாலும் இலங்கை இராணுவம் கடைபிடித்து வருவது பிரித்தானிய இராணுவ சம்பிரதாயங்களையே - ருவான் வணிகசூரிய!

Saturday, February 23, 2013
இலங்கை::பிரித்தானியாவில் செனல் 4 தொலைக்காட்சி இலங்கை இராணுவத்தின் ஆரம்ப விசாரணை நீதிமன்றத்தை விமர்சித்தாலும் இலங்கை இராணுவம் கடைபிடித்து வருவது பிரித்தானிய இராணுவ சம்பிரதாயங்களையே என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் பீரங்கி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செனல் 4 தொலைக்காட்சி சுமத்தியிருந்த குற்றச்சாட்டு தொடரர்பில் அண்மையில் இராணுவ ஆரம்ப விசாரணை நீதிமன்றம் நடத்திய விசாரணை அறிக்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படை குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களே இது தொடர்பான விசாரணைகளை நடத்தியிருப்பதாக இலங்கைக்கு எதிரான விவரண திரைப்படத்தை தயாரித்துள்ள கெலம் மெக்ரே ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து வெளியிடும் போதே இராணுவப் பேச்சாளர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை இராணுவம், பிரித்தானிய இராணுவத்தின் சம்பிரதாயங்களையே கடைபிடித்து வருகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது, இராணுவ ஆரம்பி விசாரணை நீதிமன்றத்தின் ஊடாகவே விசாரணை நடத்தி அறிக்கை பெற்றுக்கொள்ளப்படும். இலங்கையின் இராணுவ நீதிமன்றம், ஆரம்ப விசாரணை நீதிமன்றம் என்பன பிரித்தானிய இராணுவ நீதிமன்றம் மற்றும் ஏனைய சட்டத்திட்டங்களுக்கு இணையானது எனவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment