Wednesday, February 20, 2013

மார்ச் 4ல் இலங்கை தூதரகம் முற்றுகை : புலிக்கு வக்காளத்து வாங்கும் (சைகோ)வைகோ அறிவிப்பு!






Wednesday, February 20, 2013
சென்னை::மதிமுக பொதுச்செயலாளர் (புலி(சைகோ) வைகோ இன்று விடுத்துள்ள அறிக்கை: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கண் முன்னால் ஐந்து ஈழத்தமிழர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, பின்னர் அந்த சின்னஞ்சிறு பாலகனையும் ஐந்து குண்டுகளால் சுட்டுக் கொலை செய்த கொடுமை, கோடானுகோடி தமிழர்களை மனம் பதறச் செய்துள்ளது. வருகிற மார்ச் 4ம் தேதி, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் கருப்புக்கொடிகள் ஏந்தி இலங்கை அரசை உலக நீதிமன்ற கூண்டில் நிறுத்தி தண்டிக்க கோரியும், இலங்கை இனவாத அரசை கண்டித்தும் தமிழ் உணர்வாளர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அதே நாளில் சென்னையில், இலங்கை தூதரகத்தை கருப்புக்கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டம் நடத்தவும் மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் ஈழத்தமிழ் உணர்வு அமைப்புகளோடும், ஈழத் தோழமை இயக்கங்களோடும் இணைந்து இந்த அறப்போரை வெற்றிபெறச் செய்வதற்கான பணிகளைச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு (புலி(சைகோ) வைகோ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment