Saturday, February 16, 2013

ரூ 25 லட்சம் நிதி வழங்கிய கனிமொழி:பார்லி.,தேர்தலில் நெல்லைக்கு குறி!!

Saturday, February 16, 2013
திருநெல்வேலி::தி.மு.க.,எம்.பி.,யான கனிமொழி வரும் தேர்தலில் நெல்லையில் போட்டியிடுவதற்கானமுயற்சிகளில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தி.மு.க.,ராஜ்யசபா எம்.பி.,கனிமொழி இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ளதூய சவேரியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமது எம்.பி.,நிதியில் இருந்து பள்ளியின்கட்டட வசதிக்காக 25 லட்சம் ரூபாயை வழங்கினார். புதிய கட்டட அடிக்கல்லை நாட்டி கனிமொழி பேசுகையில்,இந்த பள்ளி துவங்கி 130 ஆண்டுகள் கடந்துவிட்டன.

முன்பெல்லாம் பெரிய குடும்பத்து குழந்தைகளே கல்வி கற்கும் நிலை இருந்தது. பெரியாரும், திராவிட இயக்கங்களும் ஏற்படுத்தியபோராட்டங்கள், இயக்கங்களால்தான் இன்றைக்கு ஏழை, எளிய தரப்பு குழந்தைகளும் கல்வி கற்கும் நிலை:ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்லாது நமது சமுதாயம் சார்ந்து கல்வி கற்கவேண்டும். நம்மை சுற்றி என்ன நடக்கிறது..சமுதாயத்திற்கு என்ன செய்யமுடியும்..என்ற சமூக உணர்வினை வளர்த்துக்கொள்ளவேண்டும். இந்த பள்ளி கல்வியையும், ஒழுக்கத்தையும் நூற்றாண்டை கடந்து போதிக்கிறது.மாணவர்கள் ஒழுக்கத்துடன் திகழ்ந்தால்தான் வருங்காலத்தில் சிறப்பான பணியாற்ற முடியும் என்றார்.

கனிமொழி சமீபகாலமாக நெல்லை தொகுதிக்கு அடிக்கடி வந்துசெல்கிறார்.அண்மையில் கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாளும் நெல்லையப்பர் காந்திமதியம்மனின் தீவிர பக்தர்.அவரும் நெல்லை வந்தால் நெல்லையப்பர் கோயிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தொகுதிக்கு குறி:திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி 1952ல் ஏற்படுத்தப்பட்டது. இதுவரையிலும் 15 தேர்தல்களைசந்தித்துள்ளது. இந்த தொகுதியில் காங், சுதந்திரா, தி.மு.க.,அ.தி.மு.க.,என அனைத்து கட்சியினரும்போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் சிவப்பிரகாசம், பி.எச்.பாண்டியன், ஆலடி அருணா, சரத்குமார், கடம்பூர் ஜனார்த்தனன்,

தனுஷ்கோடிஆதித்தன், ராமசுப்பு என பெரும்பாலும் நாடார் இனத்தவர்களே அதிகமுறை போட்டியிட்டுள்ளனர்.எனவே பொதுதொகுதியான நெல்லை தொகுதியில் கனிமொழி போட்டியிட வாய்ப்பிருப்பதாகவே கட்சி வட்டாரங்களில் தெரிவித்தனர்.

அண்மையில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடந்த நெல்லை பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்திலும்இதுவரை கூட்டணியில் தோழமை கட்சிகளுக்குவிட்டுக்கொடுத்தது போதும் இந்த தேர்தலில்தி.மு.க.,போட்டியிட வேண்டும் என்றாõர்கள். அதனை நிரூபிக்கும் வகையில் கனிமொழியின் நெல்லை விசிட்,அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

No comments:

Post a Comment