Thursday, February 21, 2013
இலங்கை::2013 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டின் சகல பிரதேசங்களிலும் மும்மொழி மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச தாய் மொழி தினம் தொடர்பாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
68 ஆயிரத்து 700 அரச அதிகாரிகளுக்கு மும்மொழி பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:
Post a Comment