Pages

Thursday, February 14, 2013

தமிழக மீனவர் மீதான தாக்குதல்: இலங்கை கடற்படைக்கு எதிராக 18ம் தேதி (புலி விசுவாச) டெசோ ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்!

Thursday, February 14, 2013
மண்டபம்::தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து (புலி விசுவாச) டெசோ அமைப்பு சார்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமேஸ்வரத்தில் வரும் 18ல் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழக மீனவர்கள் கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். இந்த தொடர் தாக்குதலை நிறுத்தாத இலங்கை கடற்படையை கண்டித்து டெசோ சார்பில் ராமேஸ்வரத்தில் 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து கட்சி தலைவர்கள், மீனவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட மீனவர்கள் பங்கேற்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர் கட்சி அடையாளங்கள் இன்றி வரவேண்டும். ஆர்ப்பாட்டம் நடைபெறுமிடத்தில் கட்சி பேனர்கள், கொடிகள் எதுவும் இருக்கக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, அனைத்து கட்சி தலைவர்கள் அரசியல் பேதமின்றி தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 19ல் நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக சுப.தங்கவேலன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment