Monday, December 10, 2012

லயன் எயார் சடலங்கள் இதுவரை கிடைக்கவில்லை!

Monday, December 10, 2012
இலங்கை::லயன் எயார் வானூர்தியில் பயணித்து உயிரிழந்த பயணிகளின் உடல்பாகங்களை தேடி பூநகரி – கண்டாரிக்முனை பிரதேசத்தில் 3 இடங்களில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்தார்.

அகழ்வு நடவடிக்கைள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதன்போது உடல் பாகங்கள் மீட்கப்படவில்லை.

லயன் எயார் வானூர்தி யாழ்;ப்பாணம் பலாலியிலிருந்து ரத்மலானை வரை பயணித்த போதே கடந்த 1998 ம் ஆண்டு செப்டெம்பர் 29 ம் திகதி காணாமல் போயிருந்தது.

கடந்த 2011 ம் ஆண்டு ஜுன் மாதம் 13 ம் திகதி ராணுவத்தினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகத்திற்குரியவர் மூலமாகவே வானூர்தி காணாமல் போனவிடயம் தெரிவந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment