Sunday, December 09, 2012
புலிகள் அமைப்பு, கம்போடிய நாட்டு சர்வாதிகாரியின் “பொல்பொட்” குழுவைப்போன்று செயற்பட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சத்தமின்றி இருந்து வந்தது எனவும் புலிகள் சொல்வதையெல்லாம் கேட்டு வந்தது என்றும் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என். ராம் தெரிவித்துள்ளார். இலங்கையின் பத்திரிகையாளர்களை புதுடில்லியில் வைத்து சந்தித்த போதே இந்த கருத்துக்களை ஆசிரியர் ராம் வெளியிட்டுள்ளார்.
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இன்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு முழு நாட்டிலும் சென்று சுதந்திரமாக அரசியல் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. த.தே.கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவளித்து தமது பிரச்சினை களுக்கு தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுதல் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் தலைமையிலான தற்போது ள்ள இலங்கை அரசாங்கத்தை போன்று எந்தவொரு அரசாங் கமும் இலங்கையில் சிறப்பாக ஆட்சி செய்ததில்லை என்றும் இந்த நிலையில் இனப்பிரச்சினை க்கு தீர்வைக்காண த.தே.கூட்டமை ப்பு, மஹிந்த ராஷபக்ஷவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு புலம்பெயர்ந்த தமிழ் தலைவர் களே எதிரிகள் என்றும் தெரிவித்துள்ள அவர் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதர வளித்து இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வை காணமுன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment