Pages

Monday, December 10, 2012

வடக்கில் நந்திக் கடலில் உருவாக்கத் திட்டமிட்டு தோல்வி கண்ட தமிழ் ஈழத்தை புதுக்கடை மூலம் வெற்றி கொள்ளத் தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - உதய கம்மம்பில!

Monday, December 10, 2012
இலங்கை::வடக்கில் நந்திக் கடலில் உருவாக்கத் திட்டமிட்டு தோல்வி கண்ட தமிழ் ஈழத்தை புதுக்கடை மூலம் வெற்றி கொள்ளத் தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கத்திற்கு நாட்டை நேசிக்கும் எவரும் இடமளிக்கப் போதிவதில்லையென மேல் மாகாண அமைச்சர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

தேசிய சர்வதேச நீதியில் எத்தகைய அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடினும் நாட்டை மீட்டெடுத்துத் தந்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ் அவர்களை தனிமைப்படுத்த எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் உயிரைக் கொடுத்தாவது நிறுத்துவதற்கு நாட்டு மக்கள் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மினுவாங்கொடையில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மாகாண அமைச்சர் கம்மம்பில,

தேசிய சர்வதேச ரீதியில் நாட்டுக் கெதிராக பல்வேறு சூழ்ச்சிகள் எழுகின்ற வேளையிலும் நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதியுடனேயே உள்ளனர். இது எமக்கான பெரும் பலமாகும்.

நத்திக்கடல் களப்பில் பிரபாகரனின் போராட்டத்திற்குத் தீர்வு கண்டமை நாட்டில் பயங்கரவாதத்திற்கு மட்டுமன்றி பிரிவினை வாதத்துக்கும் வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியாகும். நீதித்துறை உட்பட பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு இந்த அரசாங்கம் ஒரு போதும் சளைக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment