Monday, December 10, 2012
சென்னை:::அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா பூந்தமல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா, அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தலைவர் ஆர்.தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். பூந்தமல்லி பஸ் நிலையத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் 500 பேருக்கு லட்டு வழங்கப்பட்டது. அப்போது தெய்வசிகாமணி பேசுகையில், ‘‘ராஜீவ்காந்தி சிலையை சுற்றி ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். விழாவில் அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி நிர்வாகிகள் இ.சேகர், தாயுமானவன், கே.ஆர்.மணி, எஸ்.பி.தாமோதரன், சிவாஜி மோகன், எஸ்.ராஜேந்திரன், அரிகிருஷ்ணன், சிவாஜி சண்முகம், பூக்கடை சிவா, ஏசுபாதம், சிட்டிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தெய்வ சிகாமணி செய்திருந்தார்.

No comments:
Post a Comment