Pages

Tuesday, December 11, 2012

நேபாளம், ஈராக் மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் நியமனம்!

Tuesday, December 11, 2012
இலங்கை::நேபாளம், ஈராக் மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான நேபாளத்தின் புதிய தூதுவராக W.M.செனவிரத்னவும் ஈராக்கின் தூதுவராக சுமித் நாகந்தலவும் கியூபாவின் புதிய தூதுவராக சரத் திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் எதிர்வரும் நாட்களில் அந்தந்த நாடுகளுக்குச் சென்று தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுணுகம கூறினார்.

அத்துடன், பஹ்ரேனிற்கும் புதிய தூதுவர் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment