Pages

Tuesday, December 11, 2012

கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்துக்கே வழங்குக: டெல்லியில் அதிமுக எம்.பிக்கள் தர்ணா!

Tuesday, December 11, 2012
புதுடெல்லி::கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையுமே தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் டெல்லியில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றம் முன்பாக அதிமுக எம்.பிக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும், டெல்லி மாநிலத்தின் பயன்படுத்தாத மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திய படி அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வால்மார்ட் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்தும் அதிமுக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment