Pages

Monday, December 10, 2012

மாகாண சபை முறைமையை இரத்துச் செய்ய வேண்டாமென ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Monday, December 10, 2012
இலங்கை::மாகாண சபை முறைமையை இரத்துச் செய்ய வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதற்கு ஆளும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மாகாண சபை முறைமையைச் இரத்துச் செய்ய வேண்டும் என கோரும் மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

இனங்களுக்கு இடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் மகாகாண சபை முறைமை அவசியம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் சில தரப்பினர் மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வரும் நிலையில் தாம் உள்ளிட்ட குழுவினர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறையை நீக்குமாறு விடுக்கப்படும் வேண்டுகோளை கவனத்திற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமையில் பூரணப்படுத்தப்படாத சில பகுதிகள் இருந்தாலும் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலைபாட்டில் 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாஜ கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பாராளுமன்றத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் சுமார் 10 அரசியல் கட்சிகள் மாகாண சபை முறைமைக்கு ஆதரவை தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment