Thursday, November 1, 2012

முன்னாள் ஜே.வி.பி. எம்.பி. அஞ்சான் உம்மா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு!.

Thursday, November 01, 2012
இலங்கை::முன்னாள் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். கட்சித் தலைவர் ரணில் இவருக்கான கட்சி அங்கத்துவத்தை வழங்கி வரவேற்றார்.

2000 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் தேயப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.வி.பி.சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.

அதன் பின்னர் கடந்த 2010 ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறிய அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியில் அஞ்சான் உம்மாவும் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

No comments:

Post a Comment