Pages

Monday, July 2, 2012

வெளிநாட்டில் உள்ள புலித் தலைவர் ஒருவருடன் கலந்துரையாடிய பின்னரே,வவுனியா சிறையில் புலிச் சந்தேக நபர்கள் குழப்பங்களை ஏற்படுத்தினர் - திவயின!

Monday, July 02, 2012
இலங்கை::வெளிநாட்டில் உள்ள புலித் தலைவர் ஒருவருடன் கலந்துரையாடிய பின்னரே, வவுனியா சிறையில் உள்ள புலிச் சந்தேக நபர்கள் குழப்பங்களை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் தொலைபேசியின் ஊடாக வெளிநாட்டில் உள்ள புலித்தலைவருடன் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின கூறியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கிடைத்த ஆலோசனையின படியே மூன்று சிறைச்சாலை அதிகாரிகளை கைதிகள் சிறைப்பிடித்திருந்தனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்த கைதிகள், பல மாதங்களாக வெளிநாடுகளில் உள்ள புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வந்துள்ளதுடன், வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுடனும் தொடர்புகளை கொண்டிருந்ததாக தெரியவருகிறது எனவும் திவயின கூறியுள்ளது.

No comments:

Post a Comment