Tuesday, June 12, 2012

இலங்கையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை : கருணாநிதி வேண்டுகோள்!

Tuesday, June, 12, 2012
சென்னை::இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் தேவையான உணவு மற்றும் நீர் இன்றி வாடி வருவதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். 160 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment