Friday, June, ,15, ,2012இலங்கை::இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் கியுபாவுக்கு பயணித்தார்.
அவருடன் மேலும் 35 பேர் கொண்ட தூதுக் குழு ஒன்றும் சென்றுள்ளதாக எமது வானூர்தி நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்துக்கும், கியுபாவின் ராவுல் ரோவா கார்சியா நிறுவகத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகவுள்ளது.
இந்த உடன்படிக்கையின்படி, இலங்கையின் கல்வி, வேலைத்திட்டங்கள், மாநடுகள் போன்ற தகவல்கள் பரிமாற்றிக் கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை இரண்டு நாட்கள் கியுபாவில் தங்கி இருக்கும் ஜனாதிபதி, அங்கிருந்து பிரேஸிலுக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment