Friday, June, ,15, ,2012புதுடெல்லி::குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவதற்காக பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். குடியரசுத் தலைவர் வேட்பாளரானதால் பிரணாப் முகர்ஜி தனது நிதிதயமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது உறுதியாகியுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவை முதல், இந்நாள் பிரதமர் மன்மோகன் சிங் அவை வரை முக்கிய பதவிகள் வகித்தவர் பிரணாப் முகர்ஜி மேலும் வெளியுறவு, பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்கது....
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது. இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மந்தமாக இருந்த டெல்லி அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளரை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டன.
காங்கிரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாடி கடைசி நேரத்தில் மம்தாவுடன் கூட்டணி அமைத்தது காங்கிரசுக்கு அதிர்ச்சியை அளித்தது. எனினும் மம்தா பரிந்துரை செய்த கலாம், சோம்நாத், மன்மோகன் சிங் பெயர்களை காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக நிராகரித்தது. இந்நிலையில் நேற்று மாலை முலாயம் சிங் யாதவை அவரது வீட்டில் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்தான் எங்கள் முதல் தேர்வு. அவரை தவிர வேறு யாரை நிறுத்தினாலும் எதிர்த்து வாக்களிப்போம். இதற்காக ஐ.மு. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் கவலையில்லை என பேட்டி அளித்தார். இதனால் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
இதற்கிடையில் முலாயம் சிங்கின் சகோதரரும், கட்சி பொதுச் செயலாளருமான ராம்கோபால் யாதவ் மற்றும் மற்றொரு மூத்த தலைவர் நரேஷ் அகர்வாலுடன் காங்கிரஸ் தலைவர்கள் 5 முறை பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சமாஜ்வாடி வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் மம்தாவை வெறுக்கும் கம்யூனிஸ்ட் ஆதரவை பெறும் முயற்சியிலும் காங்கிரஸ் இறங்கியுள்ளது. மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் மற்றும் மூத்த தலைவர்களில் ஒருவரான பீமன் போஸ் ஆகியோருடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தொலைபேசியில் பேசி ஆதரவு திரட்டினார்.
பிரணாப்பை ஆதரிப்பதில் மார்க்சிஸ்ட்டுக்கு தயக்கம் ஏதும் இல்லை என்று அக்கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி பெயர் இறுதி செய்யப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பாட்னா சென்றுள்ள அப்துல் கலாமை, மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேரடியாக சென்று வரவேற்றுள்ளார். அவருடன் சேர்ந்து மதிய உணவும் சாப்பிட்டார்.
No comments:
Post a Comment