Pages

Wednesday, June 27, 2012

வட பகுதியில் புதிதாக படை முகாம்கள் அமைக்கப்படவில்லை - பிரிகேடியர் ரவி பிரிய!



Wednesday,June 27, 2012
இலங்கை::வட பகுதியில் புதிதாக படை முகாம்கள் அமைக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை இராணுவத்தினர் நிராகரித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின், மாதகல் பகுதியில் கடற்படையினர் புதிதாக முகாமொன்றை நிர்மாணித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளமை குறித்து பதிலளிக்கையில் பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி பிரிய இதனைக் குறிப்பிட்டார்.

காரைநகர் பகுதியில் ஏற்கனவே படை முகாமொன்று இருக்கும் நிலையில், அதனை அண்மித்த பகுதியில் மற்றுமொரு முகாமினை அமைப்பதற்கு என்ன தேவை ஏற்பட்டுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருந்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் வட பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள் படைமுகாம்கள் அரச காணிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த காணிகள் அரசாங்கத்திற்கு சொந்தமானவை என்பது பிரதேச செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் ரவி பிரிய மேலும் தெரிவித்தார்.

தனியாருக்கு சொந்தமான காணிகளில் படைமுகாம்கள் அமைக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment