Friday, June, ,15, ,2012இலங்கை::ஹம்பாந்தோட்டை, கட்டுவென பிரதேசத்தில் ஜே.வி.பி. இனரது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
இன்று மாலை 6.45 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிலில் வந்த இனம் தெரியாதவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக ஜே.வி.பி. இன் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று மாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் தமது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதனை ஜேவீபீயின் செயலாளர் ரில்வின் சில்வா உறுதி செய்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அரசாங்க பாதுகாப்பு தரப்பினர் இனம் தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டில் இவர்கள் மரணித்ததாக தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே அந்தக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த தருணத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் ரி 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment