Pages

Thursday, June 14, 2012

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் - பான்கீ மூன்!

Thursday, June, 14, 2012
வாஷிங்டன்::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலலங்கை அரசாங்கம்இணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

ஆயுத போராட்டங்களின் போது பொதுமக்களை பாதுகாத்தல் தொடர்பில்ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் பான் கீ மூன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் காத்திரமான பரிந்துரைகளைஅமுல்படுத்த வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆலோசனை வரவேற்கப்படவேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், பாதிக்கப்பட்டோருக்குநியாகம் கிடைத்தல் மற்றும் சுயாதீன விசாரணைகளின் மூலம் சகல குற்றச்சாட்டுக்களுக்கும்பதலளித்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென அவர்குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்துசெயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதியளிக்குமாறு வெளிவிவகார அமைச்சிற்குஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

வடக்கிற்கு விஜயம் செய்யும் மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்குபாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்ற நடைமுறை வரவேற்கப்படவேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment