Thursday, June, 14, 2012இலங்கை::சர்வதேச ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கான கேந்திர நிலையமாக இலங்கை பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைதானதை அடுத்தே தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கொழும்பிலும் நீர்கொழும்பிலுமுள்ள ஹோட்டல்கள் சிலவற்றில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 27 பேர் இந்த சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 22 பேர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டுள்ளது.
அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து, மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ஊடாக அவுஸ்திரேலியா அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளதாக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா கூறினார்.
No comments:
Post a Comment