Tuesday, June 12, 2012

குழந்தையொன்று உள்ளிட்ட நான்கு நைஜீரியப் பிரஜைகள் கைது!வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கைது!

Tuesday, June, 12, 2012
இலங்கை::வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குழந்தையொன்று உள்ளிட்ட நான்கு நைஜீரியப் பிரஜைகள் நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்த 300 கிராம் ஹெரோய்ன் மற்றும் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தடுத்து வைக்கும் உத்தரவிற்கமைய சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்...

வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கைது!

இலங்கை பெறுமதியில் 17 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் 13,000 அமெரிக்க டொலர்கள் பணம் இருந்ததாக விமான நிலைய சுங்கப் பிரிவு குறிப்பிட்டது.

இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட இந்த நபர் சீனாவிற்கு பயணிப்பதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது...

பதுளையில் தமிழ் பெண்கள் கைது!

பதுளையில் நேற்றைய தினம் வேன் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதில் பயணித்த 11 தமிழ் பெண்களும், வாகன சாரதியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைதான பெண்கள் கிளிநொச்சி, தோப்பூர், கின்னியா, மஸ்கெலியா மற்றும் தெனியாய பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவற்துறை ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்றைய தினம் பதுளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் பதுளை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்...

பம்பலப்பிட்டியில் கப்பம் பெற முயற்சித்த இருவர் கைது!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் எனத் தெரிவித்து, பம்பலப்பிட்டியில் பெண்ணொருவரிடம் 25,000 ஸ்ரேலிங் பவுன்ஸ்ஸை கப்பமாகப் பெற்றுக்கொள்ள முயற்சித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கப்பம் பெறும் முயற்சி பிரித்தானியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பிள்ளையுடன் பம்பலப்பிட்டி பகுதியில் தற்காலிகமாக தங்கியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் மூத்த மகன் இங்கிலாந்தில் மேற்படிப்பினை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்தநிலையில் இங்கிலாந்தில் இருந்து இந்தப் பெண்ணிற்கு தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்திய ஒருவர், கப்பம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் இலங்கையில் உள்ள இருவரின் ஊடாக 25,000 ஸ்ரேலிங் பவுண்சைக் கப்பமாகக் கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த பணம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் கோரப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளில் கப்பம் கோரிய இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

No comments:

Post a Comment