Tuesday, June, 12, 2012இலங்கை::தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப் பிரதேசத்திற்கான கிளைக் காரியாலயம் கோயில் போரதீவில் நேற்று (11.06.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் திறந்து வைக்கப்பட்டது.
இதில் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ பிரசாந்தன், பிரதேச அமைப்பாளரும் தவிசாளருமான சிறிதரன், கட்சியின் பொருளாளர் தேவராஜா மற்றும் கோயில் போரதீவு பிரதேசத்தின் கட்சி தொணடர்கள் உட்பட கிராம மக்களும் கலந்து கொண்டார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை மற்றும் எதிர்கால திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பிரதேசத்திலும் தனது கிளைக் காரியாலயங்களை நிறுவி அதனூடாக மக்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்ளைகள், திட்டங்கள் விரிவாக விளக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலையிலும் கட்சியின் கிளைக் காரியாலயங்கள் திறந்து வைப்படவுள்ளதாக கட்சியின் செயலாளர் தெரிவித்தார்
No comments:
Post a Comment