Wednesday,June,13,2012இஸ்லாமாபாத்::சியாச்சின் மலை பகுதியிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது குறித்து இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாச்சின் பனி மலை பகுதியை இருதரப்பும் உரிமை கொண்டாடி வந்ததால், கடந்த 84ம் ஆண்டு முதல் இங்கு ராணுவ வீரர்கள் அதிகரிக்கப்பட்டனர். ஆண்டு முழுக்க பனியால் மூடப்பட்டிருக்கும் இந்த மலையில் பூஜ்யம் டிகிரிக்கு குறைவான வெப்பநிலை எப்போதும் காணப்படுவதால் ஏராளமான வீரர்கள் பலியாகியுள்ளனர். சண்டையே நடக்காத இந்த பகுதியில் குளிரால் பலியான வீரர்கள் தான் அதிகம். சமீபத்தில் பாகிஸ்தான் வீரர்கள், 135 பேர் பனிப் பாறையில் புதையுண்டு பலியாயினர். இந்த சம்பவத்துக்கு பிறகு சியாசின் மலையில் படை வீரர்களை வாபஸ் பெற பாகிஸ்தான் திட்டமிட்டது. இதற்கு இந்திய தரப்பு முடிவையும் அந்நாட்டு ராணுவம் எதிர்பார்த்தது. இது தொடர்பாக ராவல்பிண்டியில் இருநாட்டு பாதுகாப்பு செயலர்கள் தலைமையில் இரண்டு நாட்கள் கூட்டம் நடந்தது. இந்திய பாதுகாப்பு செயலர் சசிகாந்த் சர்மாவும், பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் நர்கீஸ் சேத்தியும் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். இருதரப்பு எல்லை வரம்பு, வீரர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இருப்பினும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடும் படியான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
No comments:
Post a Comment