Wednesday, June 13, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது – கெஹலிய ரம்புக்வெல்ல!

Wednesday,June,13,2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அரசாங்கம்குற்றம் சுமத்தியுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம்சுமத்தியுள்ளார்.

எவ்வாறான தீர்வுத் திட்ட யோசனை முன்வைக்கப்பட்டாலும் அது பாராளுமன்றத்தெரிவுக்குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வடக்கு கிழக்கில் உரையாற்றிய போது சுயாட்சிகுறித்து பேசுவதாகவும், பின்னர் ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வுத் திட்டம் பற்றிபேசுவதாகவும் கெஹலிய குற்றம் சுமத்தியுள்ளார்.

சம்பந்தன் காலையில், பிற்பகலில் மற்றும் மாலையில் வெளியிடும் ஒவ்வொருகருத்துக்கும் பதிலளிக்க அரசாங்கம் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புநாளுக்கு நாள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment