Pages

Friday, June 15, 2012

அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான் குற்றமற்றவரென நிரூபிக்க வேண்டும் - கெஹலிய ரம்புக்வெல்ல!

Friday, June, ,15, ,2012
இலங்கை::அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் தான் குற்றமற்றவரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிரூபிக்க வேண்டுமென அரசாங்கப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அவருடைய மருமகன் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் ஒருவர். அவர் தலைமறைவாகியுள்ளார். பொன்சேகா ஊழலை ஒழிப்பதில் உண்மையில் அக்கறையானவராக இருந்தால் தன் மருமகனை சட்டத்தின் முன் நிறுத்தி தன் நேர்மையை நிரூபிக்க வேண்டுமெனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

தானும் தன் குடும்பத்தினரும் அரசியல் பழிவாங்கலினால் பாதிக்கப்பட்டவர்களென முன்னாள் இராணுவத் தளபதி தெளிவாகக் கூறியுள்ளாரென டெய்லிமிரர் சுட்டிக்காட்டியபோது 'அப்படியாயின் நீதித்துறை ஊழல் மிக்கதென அவர் கூற வருகின்றாரா? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

அப்படியாயின் நீதித்துறை ஊழல் மிக்கதென முதலில் நாட்டுக்கு கூறட்டும். முழு நீதித்துறையுமே ஊழலானதென அவர் கூறினால் அது வேறு கதை. ஆனால் நீதித்துறையில் அவருக்கு நம்பிக்கை இருந்திருந்தால் அவர் வேறு யாரையும் குற்றஞ்சாட்ட முன் அவர் தான் குற்றமற்றவரென நிரூபிக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

முன்னாள் இராணுவத் தளபதியின் அரசியல் விஞ்ஞாபனத்தில் முழு நாட்டிலும் அரசியல் தலையீடு தலைவிரித்தாடுவதாக கூறியதைப் பற்றி கேட்டபோது, பொன்சேகா இராணுவத் தளபதியானதே அரசியல் தலையீட்டின் காரணமாகத் தானெனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

உண்மையில் ஒரு இளைப்பாறிய இராணுவ அதிகாரியான இவர் இராணுவத் தளபதியாக்கப்பட்டார். இதை அரசியல் தலையீடென கருத முடியும். அவரை இராணுவத் தளபதியாக நியமித்தது தவறென்பது தெளிவான விடயம். அவர் கூறும் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு பொருந்துமெனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment