Friday, June, 15, 2012 இலங்கை::தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (சப்டா) வின் கீழ் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்வதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை. சார்க் வலய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் தேவைக்கேற்ப இடையிடையே ஆராயவே முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.உள்நாட்டு தேசிய உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இறக்குமதிப் பொருட்கள் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சு நடத்தி அதில் மாற்றம் செய்ய முடிவுசெய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற போது அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் :-
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் அநேக பொருட்களை தடை விதிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித் துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முற்றிலும் தவறான செய்தியாகும். அமைச்சரவையில் அத்தகைய தீர்மானம் எதுவும் எட்டப் படவில்லை.
ஒரு நாட்டைப் பற்றி மட்டுமன்றி சார்க் நாடுகளுடனான தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்தே அமைச்சரவையில் ஆராயப்பட்டது. அவற்றுடனான ஒப்பந்தங்களை ஆய்வு செய்வது எனவும் இங்கு முடிவு எடுக்கப்பட்டது.
உள்நாட்டு விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படும் இறக்குமதிப் பொருட்கள் இருந்தால் ஒப்பந்தத்தினூடாக இணக்கம் காணப்பட்டிருந்தாலும் அது குறித்து பேச்சு நடத்தி அது தொடர்பில் முடிவுகாண இங்கு தீர்மானிக் கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி களுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படக்கூடிய பொருட்கள் தொடர் பில் வெளிப்படையாக பேசி அதி லுள்ள விடயங்கள் குறித்து இறுதி முடிவுக்கு வர திட்டமிட்டுள்ளோம்.
2016 இல் பால் உற்பத்தியில் தன்நிறைவு காண திட்டமிட்டுள்ளதால் இந்த இலக்கிற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இறக்குமதிகள் குறித்து பேசி அதில் மாற்றம் செய்யப்படும்.
பல தெற்காசிய நாடுகளுடன் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது. உடன்படிக்கையினூடாக இணக்கம் காணப்பட்ட விடயங்களாக இருந்தாலும் அதில் மாற்றம் செய்வது குறித்து சம்பந்தப்பட்ட நாட்டுடன் பேசவே முடிவு காணப்பட்டது. இது தவிர இந்தியா குறித்து மட்டும் இங்கு ஆராயப்படவில்லை. இது தவறான தகவலாகும் என்றார்.
No comments:
Post a Comment