Pages

Thursday, June 14, 2012

இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைவதை கண்ட பிறகு தான் உயிர் விடுவேன்': (புலி ஆதரவு) கருணாநிதி ஆவேசம்!

Thursday, June, 14,2012
திருவாரூர்::இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைவதை கண்ட பிறகு தான் உயிர் விடுவேன்': (புலி ஆதரவு) கருணாநிதி ஆவேசம்!:-

இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைவதை கண்டு விட்டு உயிர் விட, நான் தயாராக இருக்கிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி. தமிழ் ஈழம் பிறக்க, காண்பதற்காக உயிர் விட வேண்டுமென்றாலும் அதற்கும் நான் தயார்,'' என,(புலி ஆதரவு) தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

திருவாரூரில் நேற்றிரவு நடந்த தன் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில்,(புலி ஆதரவு) தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தேர்தல் பருவ காலத்தில் சூறாவளி வீசும். தேர்தலில் தோல்வியடைந்தாலும் இந்த இயக்கம் தோற்று விட்டதாக அர்த்தம் அல்ல. தி.மு.க.,வுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது மன உறுதி, சுயமரியாதை, தன்மான உணர்வு இருக்கும் வரை, அரசியல் ரீதியாக பெறும் வெற்றிகள் பெரிதல்ல. தோற்றாலும், வென்றாலும் உங்களுடன் தான் இருப்போம். அமைச்சராக இருந்தாலும், உங்களால் அடிமைகளாக ஆக்கப்பட்டாலும், சிறையிலே அடைத்தாலும் பயந்து கொண்டு எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை என்றைக்கோ நடத்தியது என்று அல்ல. தமிழ் உணர்வை வளர்க்க, தமிழர்களுக்கு தனி உரிமை சுயமரியாதை ஏற்பட, இன்று வரை பணியாற்றும் இயக்கம்; சிரஞ்சீவி இயக்கம். சிரஞ்சீவி இயக்கம் என்றால், சாவு கிடையாது; அழிவு கிடையாது. எனக்கு அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இல்லை. ஆளுகிறவருக்கு நம்பிக்கை உண்டு. அடுத்த ஜென்மத்தில் அவர்களுக்கு கூலி கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஒருவர் குண்டா இருந்தால் போதும், அவர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. எதிர்காலத்தில் எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும்? நான் யாரையும் கேலி செய்யவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். ஜனநாயகத்தில் எல்லாரையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். சட்டசபையில் என் சக்கரவண்டி செல்ல இடமில்லாத சூழ்நிலையை ஆட்சியாளர் ஏற்படுத்தியதால், நான் வெளியே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியல் நாகரிகம் இன்று இல்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க, இந்திய அரசை வற்புறுத்துவோம்; நெருக்கடி கொடுத்து வலியுறுத்துவோம். உலகக் கவனத்தை திருப்பும் முயற்சிகளின் அடையாளமாக, விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி, "டெசோ' மாநாடு நடக்கிறது. ஈழத்தமிழர்களின் உரிமைகள் வென்றெடுக்க, உத்தரவாதம் கிடைக்க மாநாடு நடத்த உள்ளோம். சில ஆண்டுகளுக்கு முன், ஈழத்தமிழர் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட, "டெசோ' இயக்கம் இடையே நின்று போனது. அது ஏன்? என்று விவாதிக்க விரும்பவில்லை. குசோவா, தெற்கு சூடான், கிழக்கு தைமூர் தனி நாடாக பிரகடனப்படுத்த ஐ.நா., வாக்கெடுப்பு காரணமாக அமைந்தது. அதை பயன்படுத்தி இலங்கையில் தனித் தமிழ் ஈழம் பிறக்க, வாக்கெடுப்பு நடத்த உருவாக்கக்கூடிய வழியை இந்த மாநாடு மூலம் வலியுறுத்துவோம்.

இலங்கையில் வாக்கெடுப்பு நடக்கும்போது, அதில் பங்கேற்று ஓட்டளிக்க வெளிநாடு தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற தீர்மானம், அந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும். இலங்கைத் தமிழர்கள் கண்ட, நீண்ட கால கனவு நிறைவேற, தமிழ் ஈழம் உருவாக வேண்டும். அதை நாம் காண வேண்டும். அதை கண்டு விட்டு உயிர்விட நான் தயாராக இருக்கிறேன். அப்போது தான் எனக்கு நிம்மதி. தமிழ் ஈழம் பிறக்க, காண்பதற்காக உயிர் விட வேண்டுமென்றாலும் அதற்கும் நான் தயார். இவ்வாறு(புலி ஆதரவு) கருணாநிதி பேசினார்.



ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் இயக்கம் திமுக - கருணாநிதி!
திருவாரூர்::ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் இயக்கம் திமுக என அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறினார். திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலிருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் மூலம் நேற்று காலை 7.50 மணிக்கு திருவாரூர் வந்தார். மனைவி தயாளு அம்மாள், மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, இளங்கோவன் எம்.பி ஆகியோர் உடன் வந்தனர். மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் செண்டை மேளம் முழங்க கருணாநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, மதிவாணன், அழகு. திருநாவுக்கரசு, விஜயன் எம்.பி, எம்எல்ஏக்கள் அன்பழகன், டிஆர்பி ராஜா உள்பட ஏராளமானோர் கருணாநிதிக்கு சால்வை கொடுத்து வரவேற்றனர். பின்னர் கருணாநிதி சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார்.

சிறிது நேர ஓய்வுக்கு பின், காட்டூரில் உள்ள அவரது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்திற்கு சென்று கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து நினைவிடத்துக்கு எதிரில் நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன்குடிகாடு திமுக கிளை 100வது மாதக்கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் 15 பேருக்கு பொற்கிழியும், 10 பேருக்கு நினைவு பரிசும் வழங்கி கருணாநிதி பேசியதாவது: காட்டூர் பகுதிக்கு இன்று, நேற்றல்ல மறைந்த காட்டூர் ராமசாமி முதலியார் காலத்திலேயே காளியம்மன் கோயில் திருவிழாவில் இப்பகுதி மக்களை மறைந்த எனது நண்பர் தென்னனுடன் வந்து சந்தித்துள்ளேன். திமுகவுக்கு தோல்வி ஏற்பட்டு விட்டதாக யாரும் கருதக் கூடாது.

ஆட்சியில் இருந்த போதும் இல்லாத போதும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் இயக்கமாக திமுக செயல்பட்டு வருகிறது. முதல்வராக இருந்த போது எப்படி வரவேற்பு அளித்தீர்களோ, அதேபோல் தற்போதும் எழுச்சியுடன் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

இதன்பின் திருவாரூர் மேலவீதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு சென்ற கருணாநிதி, அங்கு ஏற்கனவே மக்களிடம் பெறப்பட்டு, பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த மனுக்களை பார்த்தார். இதன்பின் சன்னதி தெருவில் உள்ள வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்தார்.

No comments:

Post a Comment