Thursday, June, 14, 2012இலங்கை::கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இன்று அதிகாலை வாகனவிபத்தொன்றில் சிக்கிய எட்டு மாதக் குழந்தையும் மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வருகைதந்து, தற்காலிக கூடாரமொன்றில் தங்கியிருந்த சிலர், இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
குறித்த குழுவினரை விபத்துகுள்ளாக்கி தப்பிச் சென்ற சாரதியை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment