Pages

Thursday, June 14, 2012

மாலைதீவுப் பிரஜை உயிரிழந்தமை தொடர்பில் 10 பேரிடம் வாக்குமூலம்!

Thursday, June, 14, 2012
இலங்கை::கொழும்பிலுள்ள நடசத்திர ஹோட்டல் குடியிறுப்புக் கட்டடமொன்றின் 18 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து, மாலைதீவுப் பிரஜையொருவர் உயிரிழந்தமை தொடர்பில் 10 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இது தவறுதலாக இடம்பெற்ற விபத்தில் ஏற்பட்ட மரணமா? இல்லையா என்பதை உறுதிசெய்வதற்கான விசாரரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் ஐந்து மாலைதீவு நாட்டவர்களுடன் குறித்த நபர் குடியிருப்பு கட்டடத் தொகுதியின் 18 ஆம் மாடியில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தங்கியிருந்த குடியிருப்பில் மேலும் ஏழு பேர் தங்கியிருந்ததுடன், அதில் இரண்டு இலங்கைப் பிரஜைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment