Switzerland::பத்மநாபா EPRLF கட்சியின் ஐரோப்பிய மட்டத்திலான கலந்துரையாடலும் செயலமர்வும்! padmanabha EPRLF (press release)
07.04.2012 அன்று Switzerland நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்றது இதில் கட்சியின் அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர் மௌன அஞ்சலியுடன் கூட்டம் ஆரம்பமாகியதுகூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தலைமைகுழு தோழர்கள்.தோழர் சுகு.தோழர் வரதன்.ஸ்கைப்பின் வழியாகவும் தோழர் ரட்னம்.தோழர் மோகன்.தொலைபேசியின் ஊடாகவும் சிறப்புரையாறினார்கள் செயலமர்வின் பெரும்பாலான பகுதிகளை தோழர்கள் சுகு. வரதன் ஆகியோர் ;.ஸ்கைப்; வழியின் ஊடாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள் இச்செயலமர்வில் இலங்கையின் எமது சமகால அரசியல் தொடர்பாகவும் குறிப்பாக தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்புடன் எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் புலம் பெயர் தமிழ்மக்கள் மத்தியின் எமது வேலைத்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு பிரேனனைகள் நிறைவேற்றப்பட்டனமேலும் எமது ஸ்தாபன வடிவத்தை ஐரோப்பாவில் பலப்படுத்தி விஸ்தரிப்பது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.குறிப்பாக செயலமர்வில் கலந்துகொண்ட தோழர்கள் ஒவ்வொருவரினதும் கருத்துக்கள் ஆலோசனைகள் பெறப்பட்டு விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் பின்வருமாறு
———————————————————————
(1) அரசியல் நிலைப்பாடு
அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நீண்டகலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது இலங்கையில் இருந்து உரையாற்றிய தலைமைக்குழு தோழர்களின் கருத்துக்கள் செவிமடுக்கப்பட்டு அது தொடர்பாக பல்வேறு பட்ட கருத்துநிலைகளிலிருந்து ஆரோக்கியமான வாதப்பிரதிவாங்களும் இடம்பெற்று ஒருமித்த கருத்தாக பின்வரும் விடையங்கள் தீர்மானிக்கப்பட்டது.
1-பத்மநாபாஈபிஆர்எல்எவ் கட்சியினுடைய அதன் பாரம்பரியங்களை ஸ்திரப்படுத்தும் வகையில் கட்சியை பலப்படுத்தி விஸ்தரிப்பது
2-தமிழ்பேசும் மக்களின் சமகால அரசியல் யதார்த்தங்களை கருத்தில் எடுத்து.தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தை பலப்படுத்துகின்ற எமது கொள்கை வழிநின்றும் இலங்கையிலுள்ள எமது தலைமை குழுத்தோழர்கள் கூடி எடுக்கும் முடிவுகளை செயலாற்ற அனைத்து முயற்ச்சிகளையும் மேற்கொள்வதென தீர்மானிக்னகப்பட்டது.
3-அந்த வகையில் இன்றய சூழலில் தமிழ் தேசியகூட்டமைப்புடன் தமிழ்மக்களின் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்படக்கூடிய வழிமுறைகளை தீவிரமாக ஆராய்ந்து செயற்பாடுகளை முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
4-ஈபிஆர்எல்எவ் என்று அடையாளப்படுத்தி செயற்ப்பட்டு வரும் அனைத்து தரப்பினரையும் ஒருமுகப்படுத்தி முற்போக்கு ஜனநாயக கட்சியாக வளர்தெடுப்பதற்கு அனைவருடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது
(2) மறைந்த தோழர்களின் குடும்பங்களுக்கான உதவிகள்
வெளிநாடுகளில் உள்ள தோழர்கள் தம்மால் இயன்ற வரையில் இலங்கையிலுள்ள எமது மறைந்த தோழர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்தல் வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.உடனடியாக இந்த உதவிகள் பின்வரும் வழிகளில் மேற்கொள்ளப்படவேண்டும்
1-தனிப்பட்டமுறையில் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவுதல்
2-ஒவ்வொரு கிளைகளின் ஊடாகவும் வேலைதிட்டத்தை அமைத்து அதனூடாக உதவுதல்.
3- அங்குள்ள தோழர்களுடன் தொடர்பு கொண்டு அல்லது நிறுவனங்கள் ஊடாக தொடர்கொண்டு அங்கு பயன்படக்கூடிய பொருட்களை சேகரித்து அனுப்புதல்
(3) ஐரோப்பிய கிளைகளின் விஸதரிப்பு
ஓவ்வொரு வங்கி கணக்குகளினூடாவோ அல்லது ஓழுங்கு படுத்தப்பட்ட வழிகளின் மூலமாக சந்தாப்பணம் தவறாது பெறப்படல் வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.ஓவ்வொரு கிளைகளின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு செயற்திட்டங்கள் வகுத்து செயல்படவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
(4) தியாகிகள் தினம்
இவ்வருடம் எல்லாக்கிளைகளிலும் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்படவேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
நன்றி தோழமையுடன்
செயலமர்வு குழுசார்பாக
தோழர் சாந்தன்.
(padmanabha EPRLF)
No comments:
Post a Comment