Thursday, April 05, 2012திரிசூலம்::அமெரிக்க போர் விமானம் ஒன்று நேற்று காலை, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானம், சென்னை வந்ததற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இந்திய அமெரிக்க கூட்டுப்போர் பயிற்சியின் போது, அமெரிக்க விமானங்களும், போர் கப்பல்களும், சென்னை வருவது வழக்கம். நேற்று காலை 9.30 மணிக்கு, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம், எதற்காக சென்னை வந்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும் போது, ""அமெரிக்க போர் விமானங்கள் கூட்டுப்போர் பயிற்சிக்காக வருவது வழக்கமான ஒன்று தான். இதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. முறையான அனுமதியுடன் தான் அந்த விமானம், சென்னையில் தரையிறங்கியுள்ளது. இந்திய கடலோரக் காவல் படையுடன் கூட்டுப்போர் பயிற்சி செய்வதற்காக கூட, அந்த விமானம் சென்னை வந்திருக்கலாம். அமெரிக்க போர் விமானத்தில் யார் வந்தார்கள், எங்கு சென்றார்கள் என்பது குறித்து, எந்த தகவலும் இல்லை,'' என்றார்.
No comments:
Post a Comment