Monday, April, 09, 2012இலங்கை::நான் கூறும் கருத்துக்கள் அழகிய எங்கள் இலங்கைத் தீவின் எதிர்கால சுபிட்சத் திற்கானவையாகும். நான் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சராக மட்டுமன்றி, தமிழ் பேசும் மக்க ளின் அரசியல் அபிலாசைகளையும், எண்ணங் களையும், இலட்சியங்களையும் ஈடேற்றும் யதார்த்தபூர்வமான நடை முறைகளை ஏற்று, எமது மக்களின் பிரதிநிதியாகவுமே இந்த சபையில் எனது கருத்துக்களை முன் வைக்கின்றேன்.
நான் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை களுக்காக எந்தளவிற்கு குரல் கொடுக்கின்றேனோ, அந்தளவிற்கு இலங்கைத் தீவின் இறைமையையும், சுயாதீனத்தையும், இன ஐக்கியத்தையும் விரும்புகின்றேன்.
இந்த நிலைப்பாட்டில் இருந்துதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை யின் 19 வது கூட்டத் தொடரிலும் நான் கலந்து கொண்டிருந்தேன்.
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை களை வென்றெடுக்கவும், சிதைந்து போன எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்களை மீளக் கட்டியமைத்து, அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தவும், அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டுவதற் காகவுமே நான் ஜெனீவா மாநாட்டில் கலந்து கொண்டிருந்தேன்.
நாம் எமது மக்களுக்கு வெளிப்படை யாகவே கூறி வருவது போல், இந்த நிலைப்பாடு எமது கட்சியின் நடைமுறை சார்ந்த கொள்கை யைக் கொண்டது.
நாம் ஜெனீவா மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கும், பெரும்பான்மை சமூகத்திற்கும் எமது நல்லெண்ண சமிக்ஞையை வெளிப் படையாகவே காட்டி இருக்கிறோம். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைமுறைக்கு ஏதுவான வழிமுறை எனக்கூறி ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்த தன் மூலம் அரசாங்கத்திற்கு மறைமுக ஆதரவு வழங்கியுள்ளனர்.
நாம் காலம் காலமாக கூறிவந்த “ஐக்கிய இலங்கைக்குள் நிலைத்து நிற்கத்தக்கதும், நடைமுறைக்கு ஏது வானதுமான அரசியல் தீர்வு” என்ற கோட்பாட்டை இன்று சம்பந்தன் அவர்கள் கூறியிருப்பதை காலம் கடந்த ஞானமாக கருதுவதா. அல்லது, வழமை போன்ற அவர்களது சந்தர்ப் பவாத அரசியல் என்று கருதுவதா...?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்ததை நான் வரவேற்கின்றேன். ஆனாலும், அரசாங்கத்திற்கு ஒரு கருத்தும், அதற்கு மாறாக தமிழ் மக்களுக்கு இன்னொரு கருத்தும் கூறி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இரட்டைவேட அரசியல் நாடகத்தையே நாம் வெறுக்கின்றோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்திருந்த சமயம், அதனை நிராகரிப்பதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று அதனை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றது. இது என்ன வேடிக்கை.
ஜெனீவா மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்து, அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இன்று அமெரிக்கப் பிரேரணையை நிறை வேற்றாவிட்டால் விபரீத விளைவுகளை எதிர் கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக் கின்றார்கள்.
ஈ.பி.டி.பி.யினராகிய நாம், எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை குறித்து தெளி வான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறோம். நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து, நிலைத்து நிற்கக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தை வகுத்து செயற்பட்டு வருகின்றோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், நாம் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்ற எமது மக்களின் அரசியல் தீர்வு குறித்த நிலைத்து நிற்கக் கூடிய நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளும் பொதிந்திருக்கின்றன. ஆகவேதான், அமெரிக்கப் பிரேரணைக்கு முன்னராகவே நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வரவேற்றி ருந்தோம். அதை நடைமுறைப்படுத்துமாறும் கோரியிருந்தோம்.
இதுவரை அமெரிக்காவின் வரலாறுகள் யாவும் எமக்குப் பல உண்மைகளை கற்றுத் தந்திருக்கின்றன. உதவும் நண்பர்கள் போல் நடித்து, பிறநாடுகளின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து, குழப்பங்களையும், கலகங் களையும் இன்று வரை விளைவித்துக் கொண்டி ருக்கும் வரலாறுகளை நாம் காண்கின்றோம். இந்த அனுபவங்களை கற்றுக் கொண்ட நாம் தெளிவான தொலைதூரச் சிந்தனைகளோடு தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை வெற்றி அடையாமல் போயிருந்தாலும், நல் லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இருந்திருக்காது. ஏனெனில், எமது வேலைத்திட்டத்தில் ஏற்கனவே அடங்கியுள்ள பல விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் கூறப்பட்டுள்ளன.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை வெற்றி பெற்றதான கற்பனையில் மார் தட்டிக் கொள்ளும் பெருமிதங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்றோ, இன ஐக்கியம் பேணப்பட வேண்டுமென்றோ மனவிருப்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. வெறுமனே தமது சுயலாபக் கனவுகள் ஈடேறியிருப்பதான உணர்ச்சி ஊட்டும் மாய வித்தைகளே அதில் வெளிப்பட்டு நிற்கின்றன.
எமது பிரச்சினையை நாமே பேசித் தீர்க்க வேண்டும். இனங்களுக்கிடையில் பகைமையை வளர்த்துக் கொண்டு, இன முரண்பாடுகளைத் தூண்டி விட்டுக் கொண்டு, அரசியல் உரிமைப் பிரச்சினைக்கோ அன்றி வேறெந்தப் பிரச்சினை களுக்கோ ஒரு போதும் தீர்வு கண்டுவிட முடியாது.
எமது அரசாங்கம் ஒரு செயல்திட்டத்தை வகுத்து, அதன் வழி செயற்பட்டும் வருகிறது. இச் செயற்திட்டத்தில் அடங்கியுள்ள எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை குறித்த பல விடயங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அரசாங்கம் தனது செயற்திட்டத்திற்கு அமைவாக எஞ்சியுள்ள விடயங்களையும் செயற்படுத்தும்.
அன்று நடைமுறையிலிருந்து வந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பல இன்று அகற்றப்பட்டுள்ளன. உதாரணமாக பாதுகாப்பு அனுமதி முறை, பிராயணங்களுக்கான முன் அனுமதி பெறல், தொழில் செய்வதற்கான பாதுகாப்பு அனுமதி, குறிப்பாக, கடற்றொழிலுக்கான அனுமதி, சோதனைச் சாவடிகள், வீதித்தடைகள், வீதி ரோந்துகள், வீதி சோதனைகள், பயணிகள் சோதனைகள், வீட்டுச் சோதனைகள், விடுதி சோதனைகள், ஊரடங்குச் சட்டம், அவசரகாலச்சட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட வீதிகள், இராணுவப் பதிவு முறைமைகள், இராணுவ அடையாள அட்டை முறைமை போன்றவை இன்று நடைமுறையில் இல்லை.
அன்று இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட பாடசாலைகள் பல விடுவிக்கப்பட்டு, புனரமைக் கப்பட்டு அவற்றில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மக்கள் பாவனைக்கு விடப்படாதிருந்த வணக்கஸ்தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் இன்று பொது மக்கள் சுதந்திர மாக சென்று வருகின்றார்கள். உதாரணமாக, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், கீரிமலை தீர்த்தக்கேணி, கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம், காரைநகர் கசுரினா கடற்கரை, முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில், கிளிநொச்சி கந்தசாமி கோவில், மன்னார் மடு தேவாலயம், திருக்கேதீஸ்வரம் போன்றவற்றை சொல்லலாம்.
யுத்தத்தின் போது சரணடைந்தும், கைது செய்யப்பட்டும் இருந்த பல்லாயிரக்கணக்கான முன்னாள் புலி உறுப்பினர்கள் இன்று புனர் வாழ்வளிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவில்லையா?
பாவனைக்கு விடுவிக்கப்படாதிருந்த பல்லா யிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மிதிவெடிகள் அகற்றப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவில்லையா?
தடைசெய்யப்பட்டிருந்த ஏ9 பாதை திறக்கப்படு வதானது யாழ். குடாநாட்டு மக்களின் சொர்க்க வாசலாகக் கருதப்பட்டது. அப்பாதை திறக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் இடம்பெற வில்லையா? கடந்த கால அழிவு யுத்தத்தினால் சேதமாகிப் போன வட மாகாணத்திற்கான புகையிரதப் பாதைகளை மீள அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படவில்லையா?
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையா?
அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறப்பட்ட பல இடங்கள் பொது மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்படவில்லையா? அவ்விடங்களில் இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீளக் குடியமர்த் தப்படவில்லையா?
சங்குப்பிட்டி பாலம் முதற் கொண்டு பல பாதைகள் புனரமைக்கப்படவில்லையா?
இலங்கையின் எவருக்கும் எந்தவொரு இடத்திற்கும் அச்சம், சந்தேகமின்றி சுதந்திரமாக சென்று வரக் கூடிய ஓர் சூழ்நிலை ஏற்படுத்தப் படவில்லையா?
இவற்றை அரசாங்கம் செய்வதற்கு எந்தவொரு ஆணைக்குழுக்களும் பரிந்துரை செய்திருக்கவில்லை. எந்தவொரு வெளியுலகத் தீர்மானங்களுக்கும், எதிர்த்தரப்பு அழுத்தங்களுக்கும் அடிபணிந்து அரசாங்கம் இவற்றை செய்திருக்கவுமில்லை.
இன்னமும் ஆற்றவேண்டிய பணி களை ஆற்றும் என்பதனை உறுதிபட இச்சபையில் கூறி வைக்க விரும்பு கின்றேன்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஓர் அழிவு யுத்தத்தை சந்தித்து வந்த நாம், யுத்தத்தின் சிதைவுகளில் இருந்து நிமிர்ந்தெழ கால அவகாசம் தேவை என்ற உண்மையை நிராகரிக்கவில்லை.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச் சினைக்குத் தீர்வுகாணும் வழிமுறையில் காலம் கடத்தும் தந்திரோ பாயங்களை செய்து வந்திருந்தன. அவ்வாறான ஒரு பொறுப்பற்ற செயலை இந்த அர சாங்கம் ஒரு போதும் முன் னெடுக்காது என்பது எமது நம்பிக்கை.
ஏனெனில், இலங்கை-இந்திய ஒப்பந் தத்திற்கு பிந்திய காலச்சூழலில் தமிழ் பேசும் தலைமைகளே அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் தட்டிக் கழிக்கும் சுயலாப அரசியலை நடத்தி வந்திருக்கின்றன.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்ட சமயத்தில் புலிகள் தரப் பில் 652 உறுப்பினர்கள் மாத்திரமே இறந்துள்ளனர் என்று புலிகள் அன்று உரிமை கோரியிருந்தனர். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது? கிடைத்த தீர்வுகளை ஏற்க மறுத்து, இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்களை சுயலா பத் தமிழ்த் தலைமைகள் யுத்த களத்தில் பலி கொடுத்திருக்கின்றனர். அழிவுகளுக்கும், அவ லங்களுக்கும் நீங்களே காரணமாக இருந்துவிட்டு இன்று உலகத்தின் கண்முன்பாக வெறுமனே போலி ஒப்பாரி வைத்து ஓலமிடுகின்aர்கள்.
உண்மையாகவே நீங்கள் மக்களின் அழிவு களை தடுக்க வேண்டுமென்று எண்ணியிருந்தால், இறுதி யுத்தத்தின் போது அப்பாவி பொது மக்கள் புலிகளால் மனிதக் கேடயங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த விடயத்தையும், தமது பாதுகாப்புத் தேடி புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட முயற்சித்த மக்களை புலிகள் கொன் றொழித்த விடயத்தையும் உலக நாடுகளுக்கு முறையிட்டு தடுக்க முன்வந்திருக்கலாம்.
இராணுவம் மடுவுக்கு வந்தால் நீங்கள் மதவாச்சியில் நிற்பீர்கள் என்றும், இராணுவம் கிளிநொச்சிக்கு வந்தால் நீங்கள் கொழும்பிலே நிற்பீர்கள் என்றும் கூறினீர்கள். பீரங்கி பலம் கொண்டு அரசுடன் பேசுவோம் என்aர்கள், 40 ஆயிரம் சவப்பெட்டிகளை படையினருக்காக தயாராக வைத்திருங்கள் என்aர்கள், இதே சபையில் வைத்து அவ்வாறு வீரமுழக்கமிட்ட நீங்கள், இப்போது 40 ஆயிரம் மக்கள் பலியாகி விட்டார்கள் என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்aர்கள்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் முதற்கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாசா, சந் திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ என அனைத்து அரசுகளோடும் பேசி எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை க்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத் திருந்தன. அந்த அரிய வாய்ப்புகளை சுயலா பத் தமிழ்த் தலைமைகள் சரிவரப் பயன்படுத்தி இருந்தால், எமது மக்கள் அழிவுகளைச் சந்தித் திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நடந்திருக்காது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தனது அங் கத்தவர்களை நியமிக்காமல் விதண்டாவாதம் பேசி வருகிறது. சுயலாப அரசியல் கருதிய தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் கூட்டமைப்பினர் வழமையான நோக்கத்திற்கு அமைவாக தமிழ் மக்களை நெருக்கடி மிக்க பதற்ற நிலைக்குள் தொடர்ந்து வைத்திருந்து அவர்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். கடந்த ஒக்டோபரில் அரசு கோரியிருந்தமைக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான தனது அங்கத்தவர்களை நியமித்திருந்தால் இம்மாதத்திற்குள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் முற்றுப் பெற்றிருக்கும். தமது தேர்தல் வெற்றிக்காக மட்டும் அரசியல் சித்து விளையாட்டு நடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறிக்குள் எமது மக்கள் தொடர்ந்தும் வீழ்ந்து விடப் போவதில்லையென்பதை கூட்டமைப்பினர் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே எமது அரசாங்கம் தனது செயற் திட்டத்திற்கு அமைவாக தமிழ் பேசும் மக்க ளின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கும் ஏனைய முழுமையான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று கூறி அதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பங்களிப்புக்களை இதயசுத்தியுடன் வழங்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
ஜெனீவா பிரேரணை என்பது ஒரு மாய மான். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் தீர்வு என்பதே நிஜ மான். எனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் எமது அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினைக்கு நடைமுறைக்கு ஏதுவான நிலையான தீர்வை எட்டுவதற்கு பங்களிப்பு வழங்குமாறு அனைத்து தரப்பினருக்கும் எமது மக்கள் சார்பாக மனிதாபிமான அழைப்பினை விடுக்கின்றேன்.
No comments:
Post a Comment