Wednesday,April,11,2012புதுடில்லி::அணு உலை பாதுகாப்பு தொடர்பில் விரைவில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அணு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளிடமோ அமைப்புக்களுடனோ இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அணு உலை தொடர்பில் ஏற்கனவே இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment